பட்டியல் சாதியினருக்கு எதிராக பாஜக செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையம் அரசியலமைப்பு அமைப்புகளில் ஒன்றாகும். ஆனால் கடந்த ஓராண்டாக ஆணையத்தில் இரண்டு முக்கியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இது கமிஷனை பலவீனப்படுத்தியுள்ளது. சமூக அநீதிகளை எதிர்கொள்ளும் பட்டியல் சாதியினருக்காக எஸ்சி தேசிய ஆணையம் குரல் கொடுக்க வேண்டும். பட்டியல் சாதியினர் அளிக்கும் புகார்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக, பட்டியல் சாதியினருக்கு எதிராக செயல்படுகிறது. ஆணையத்தில் உள்ள முக்கியப் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போதுதான் பட்டியல் சாதியினரின் நலன்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.