திண்டிவனம்: 2 மாதத்தில் ஏதோ நடக்கப்போகிறது என்று திண்டிவனத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் தனியார் கல்லூரியில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் முப்பெரும் விழா நடந்தது.
அங்குள்ள குரு சிலை அருகே, தனது பிறந்தநாளையொட்டி 86 மரக்கன்றுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘கடந்தாண்டு 16 வகையான 7,770 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே செல்வம். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 10.5% இடஒதுக்கீடு குறித்து பேசினேன். அப்போது இந்த ஊமை ஜனங்களுக்கு உங்களை விட்டால் யார் செய்யப் போகிறார்கள் என்றேன். ஆனால் இந்த ஊமை ஜனங்கள் இன்னும் 2 மாதத்தில் தைரியமாக பேச போகிறார்கள். இந்த நாடு அதனை பார்க்கப் போகிறது. ஏதோ நடக்கப்போகுது… நடத்தி காட்டப் போகிறோம்…’ என்றார்.