புதுடில்லி: டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று முறைப்படி பதவியேற்கிறார்.
பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா, டெல்லியின் 4ஆவது பெண் முதல்வராக ஆக இன்று பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.
27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதற்குமுன் சுஸ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்ஷித், அதிஷி ஆகியோர் டெல்லி முதல்வர் ஆக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.