சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவரது மரணம் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்தனர். இந்நிலையில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ்-தளத்தில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு கழக நிறுவனர் தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுநாளான இன்று தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்து, தமிழக மக்களின் அன்பைப் பெற்றவர் திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர். உயர்ந்த மனிதாபிமான குணங்கள் மற்றும் பெருந்தன்மை, அவரது பொது வாழ்க்கையின் சாதனைகளை நான் நினைவில் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.