ரஷ்யா: சண்டை நீடிக்கும்… ஜெலன்ஸ்கியின் போர் முடிவு திட்ட பேச்சை ரஷியா புறந்தள்ளி விட்டு சண்டை நீடிக்கும் என அறிவித்துள்ளது.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை இரு நாடுகளுக்கு இடையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்த நிலையில்தான் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் மூன்று வாரங்களுக்கு முன் நுழைந்தது. அப்பிராந்தியத்தில் உள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளை தங்கள் வசப்படுத்திய உக்ரைன ராணுவம், ரஷியாவின் ராணுவ வீரர்களையும் பிடித்து வைத்துள்ளனர்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “தன்னுடைய திட்டத்தை (திட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை) அமெரிக்க அதிபர் முன் எடுத்து வைப்பேன். மேலும் அவரை தொடர்ந்து விரைவில் அதிபராக இருப்பவர்களிடமும் எனது திட்டத்தை கூறுவேன் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் “ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியது என்னுடைய திட்டத்தின் ஒரு பகுதி. இது பொருளாதாரம் மற்றும் டிப்ளோமேடிக் ஆகியவற்றை உள்ளடக்கியாகும்.
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி ரஷியாவின் உள்பகுதிகளை (ரஷியாவின் மையப்பகுதி) தாக்க அமெரிக்காவிடம் அனுமதி கேட்பேன். இதன் மூலம் ரஷியாவை போர் முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு தள்ள முடியும். இதுதான் என்னுடைய யோசனை” என ஜெலன்ஸ்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெலன்ஸ்கி திட்டம் குறித்த கேள்விக்கு ரஷியா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதில் அளிக்கையில் “எங்களுடைய இலக்கை அடையும் வரை எங்களுடைய சிறப்பு ராணுவ நடவடிக்கை என அழைக்கப்படும் உக்ரைன் மீதான சண்டை தொடர்ந்து நடைபெறும். உக்ரைனின் பிரதிநிதிகளிடமிருந்து இதுபோன்ற அறிக்கைகளைக் கேட்பது இது முதல் முறை அல்ல. இந்த கீவ் ஆட்சியின் தன்மையை நாங்கள் அறிவோம்” என்றார்.