சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரம்ஜான் மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழகத்தில் சிறுபான்மையினராக உள்ள சமணர்களின் திருநாளான மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் மதக் கடைகளை மூட முடிவு செய்துள்ள தமிழக அரசு, பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை செவிசாய்க்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சில மத குழுக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும் சிலருக்கு எதிராகவும் அரசு செயல்படுவது முற்றிலும் தவறானது.

எனவே, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புனித வெள்ளி மற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கான அரசாணையை நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தினர்.