சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானின் கருத்தை விமர்சித்த திமுக எம்பி கனிமொழி, “பெண்களை இதைவிட இழிவாகப் பேச முடியாது. அவர் வீட்டிலும், கட்சியிலும் இதைப் பெண்கள் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?” என்று கேட்டார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்:- பொறுப்பில் இருப்பவர்களிடம் கேட்டால் பதில் சொல்வார்களா? என் கட்சியில் உள்ள பெண்கள்தான் என்னைப் பற்றி பேச வேண்டும். அவர் பேசக்கூடாது. குறிப்பாக தி.மு.க.வினர் அல்ல. விசாரணை நடக்கும் போது என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி குற்றம் சாட்ட முடியும்?
அவர் நீதிபதி இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, மாணவி மதி விவகாரம், மனவளர்ச்சி குன்றிய பெண் மீதான பாலியல் வன்கொடுமை, பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள், முதல்வர்களின் தொல்லை போன்ற பிரச்னைகள் குறித்து கனிமொழி ஏன் வாய் திறக்கவில்லை. நடிகை விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 15 வருடங்களாக நான் கண்ணியமாக இருந்தபோது ஏன் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை?
ஏனெனில், அந்த நடிகை மட்டுமே பெண். எங்கள் வீட்டில் அனைவரும் பெண்கள் இல்லை. அப்படித்தானே. அவர்களுக்கு எதுவும் பேச உரிமை இல்லை. முதலில், அவர்கள் தலைமை பண்புடன் பேசட்டும். அப்போது நான் கண்ணியமாக பேசுவேன். பொறுப்பில்லாமல் இன்பம் அனுபவியுங்கள் என்று பெரியார் சொன்னதைச் செய்திருக்கிறேன். இதனால் அவர்களுக்கு என்ன பிரச்சனை? 15 ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்னைக்கு முடிவு கட்டவே வழக்கு தொடர்ந்தேன்.
ஆனால் ஆட்சியாளர்கள் அதை விரும்பவில்லை. வழக்கை இழுத்தடிக்க நினைக்கிறார்கள். என்னை சமாளிக்க முடியாமல் அவதூறாக குற்றம் சாட்டுகின்றனர். இதற்கெல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறிய சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்துள்ளார்.