சென்னை: தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்.
செங்கோட்டையனுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி. அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், “செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து… அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.