சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் குப்பை கொட்டிய விவகாரத்தில், என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டியுள்ளார், குப்பையை வீசியவர்கள் காங்கிரசார் என்பதை நிரூபிக்கட்டும். இதுகுறித்து அவர் நேற்று தலைமைச் செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சவுக்கு சங்கர் வீட்டில் குப்பை கொட்டப்பட்ட சம்பவத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளேன்.
இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால் இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படி யாரும் இல்லை. அப்படி இருந்தால் அது நிரூபிக்கப்படும். அதேபோல், மாநகராட்சி ஒப்பந்தம் எடுத்துள்ளேன் என்றும் கூறுகிறார்கள். நான் எப்படி எடுக்க முடியும்? இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா? சவுக்கு சங்கர் எனக்கு எதிராக மறைமுகமான செயல்திட்டம் வைத்துள்ளார்.

நான் மாநிலத் தலைவராக இல்லை என்றால், அவர் விரும்பும் ஒருவரை மாநிலத் தலைவராகக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இது தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் தெரியும். டெல்லி தலைமைக்கும் தெரியும். என் மீது குற்றம் சுமத்தி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தான் விரும்பியவரை அந்த பதவியில் நியமிக்க திட்டமிட்டுள்ளார். நான் அவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. அவருடைய திட்டம் வெற்றியடையட்டும். என்னை திட்டி பணம் பெற்றால் வாழ்த்துகள்.
அவர் நிறைய பணம் சம்பாதிக்கட்டும். துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் எடுக்க வேண்டிய நிலையை மாற்ற இந்தியாவிலேயே எங்கும் இல்லாத திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அதில் தவறு இருந்தால் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். அதை விடுத்து, துப்புரவு பணியாளர்களை இழிவுபடுத்துவதும், குடித்துவிட்டு தூங்குவதாக கூறுவதும் ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.