தூத்துக்குடி: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு… தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு கம்யூ., கட்சி நல்லகண்ணுவின் பெயர் வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் நல்லகண்ணு இன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்ல கண்ணனின் பெயர் சூட்ட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சிடி ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் தரம் உயர்த்தி புதிய மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. தோழர் நல்லகண்ணுவின் 85 ஆண்டு கால மக்கள் பணியை போற்றும் வகையில் அதற்கு அவரது பெயர் வைக்கப்படும் என கூறியுள்ளார்.