புதுடில்லி: பிரதமர் மோடியை இன்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மாலை 6.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.