சென்னை: கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார். இமதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் காலமானார். இவரது மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர், “என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் இன்று ஞாயிறு மாலை நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,” தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.