சென்னை: சபாநாயகரை கண்டித்து இன்று தமிழக சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ‘யார் அந்த தியாகி’ என்ற பேட்ஜ்களை அணிந்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து விவாதிக்கக் கோரி பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, முதல்வரின் கோரிக்கையை ஏற்று, பேட்ஜ் அணிந்து மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சட்டசபையில் இருந்து ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரின் செயலைக் கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து கவனத்தை ஈர்த்தனர்.
இன்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையனும் கருப்பு சட்டை அணிந்து வந்தார். இதனிடையே, அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்ததை விமர்சித்த செயல்தலைவர் ஸ்டாலின், ‘‘சட்டசபைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவி உடையில் வராதது மகிழ்ச்சி அளிக்கிறது.