சென்னை: மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், மற்ற பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிடவும், சாமானிய மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைப் பேரிடர், தொற்றுநோய்களின் போது அவசரப் பணிகளை மேற்கொள்ளவும் சில மாவட்டங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்துள்ளார் ஸ்டாலின்.
அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக கீழ்க்கண்ட அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவும் நியமித்து உத்தரவிட்டார்.
வேளாண்மை – தருமபுரி மாவட்ட விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தென்காசி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, கோவை மாவட்ட மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பெரம்பலூர் மாவட்டத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனையும் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.