சென்னை : அமைச்சர் பழனிவேல் ராஜன் இருமொழிக் கொள்கை குறித்து தெளிவாக விளக்கி உள்ள போதும் தமிழகம் மீது மொழித் திணிப்பு ஏன்? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் ராஜன் தெளிவாக விளக்கி உள்ளதாக முதல்வர்ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், மொழித் திணிப்பு ஏன்?, மும்மொழிக் கொள்கையால் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் ஏதாவது ஒன்றை கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீதான மொழித் திணைப்பை ஏற்கமாட்டோம் என கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்விக்கான நிதியை அளிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்ததால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு இது குறித்து எவ்வித பதிலும் தெரிவிக்காமல் உள்ளது.