சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கையுடன் இணைந்து தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களது 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி அத்துமீறி கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
சமீப காலமாக தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் கைது செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 16-ம் தேதி மீன்பிடிக்கத் தொடங்கிய நான்கு மாதங்களில் 425 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது தவிர 58 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் 196 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி மட்டும் 131 பேர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 50 பேர் கடந்த 5-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 21 பேர் சொந்த ஊருக்கு செல்வதற்குள் இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதை இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டிருப்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
கடந்த வாரம் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் இந்தப் பிரச்னையை கருணையுடன் கையாள வேண்டும்; அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படக்கூடாது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதன் பிறகும் தமிழக மீனவர்களை சிங்கள அரசு தொடர்ந்து கைது செய்து வருவது இந்திய இறையாண்மைக்கு சவாலாக உள்ளது.
இதைத் தொடர இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.