புதுடில்லி: நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திமுக அரசின் பல திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது என மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியில் குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, தொழில், உற்பத்தி, சிறுகுறு தொழில், வேளாண் உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டை பாராட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.