தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி நிலைய முகவர் 2 (பிஎல்ஏ ), வாக்குச்சாவடி குழு ஆலோசனை கூட்டம் காவேரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் வரவேற்றுப் பேசினார். டில்லி சிறப்பு பிரதிநிதியும், தஞ்சை தொகுதி மேற்பார்வையாளருமான ஏ.கே.எஸ். விஜயன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்று பேசியதாவது : தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி நட்சத்திர தொகுதி ஆகும். தமிழகமே உற்று நோக்கக்கூடிய தொகுதி . சட்டமன்ற கூட்ட தொடரில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதி பிரச்சினைகளை கூறும் போது உன்னிப்பாக கவனித்து அனைத்தையும் உடனுக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். விடுப்பட்ட அனைத்து மகளிர்களுக்கும் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இப்படி அனைத்து மக்களுக்கும் பல்வேறு நல்ல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் ஆட்சி நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான். வரும் 2026 சட்டமன்ற தொகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கண்டிப்பாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில நிர்வாகிகள் இறைவன், காரல் மார்க்ஸ், ஜித்து, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட பொருளாளர் அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் மணிமாறன், புண்ணியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த சாமி, பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், வல்லம் பேரூர் செயலாளர் கல்யாணசுந்தரம் , மாநகர நிர்வாகிகள் சுப்பிரமணியன், செந்தில்குமார், எழில், உஷா காளையார் சரவணன், சந்திரசேகரன், குணசேகரன், சரவணன், பாலகுமார், கண்ணன், ரவி, சிவக்குமார், ஆனந்த், உதேக், கார்த்திகேயன், வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.