நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மாநாட்டை நடத்திவிட்டு, உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், வரும் தேர்தலுக்கு முன் கட்சி கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்று கட்சியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான பட்டியலை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 120 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, டிசம்பர் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக, பெரிய மாவட்டத்துக்கு மட்டும் 2 அல்லது 3 மாவட்டச் செயலாளர்கள், 3 ஒன்றியச் செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நாள்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி நேற்று அவர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடினமாக உழைப்பவர்களுக்கே கட்சியில் பதவி வழங்கப்படும் என்றார். அதுமட்டுமின்றி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக நிர்வாகிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.