சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ எழிலன் கூறியதாவது; 2016-ம் ஆண்டு, நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்திவிட்டு பின்னர் தொடருமாறு மத்திய அரசு கூறியது. 2016-ம் ஆண்டு, கீழடி இந்திய துணைக்கண்டத்தின் ஆரம்பம் என்று கலைஞர் கூறினார். தமிழர்கள் எவ்வளவு பழமையானவர்கள் என்பதை அறிய கீழடியில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது.
சரியான ஆராய்ச்சிக்குப் பிறகுதான் கீழடியில் உள்ள பொருட்களின் வயது தீர்மானிக்கப்பட்டது. கீழடி அருங்காட்சியகம் திமுக அரசால் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டன. கீழடி அகழ்வாராய்ச்சிக்கு ரூ.105 கோடி ஒதுக்கியதாக அதிமுக கூறுவது பொய். கீழடி அகழாய்வுக்கு அதிமுக வெறும் ரூ.1 கோடியை மட்டுமே ஒதுக்கியது.

2016 முதல் 2021 வரை 2 தொல்பொருள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே அதிமுக நிதி ஒதுக்கியது. திமுக ஆட்சிக் காலத்தில் 38 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சிக் காலத்தில், அகழாய்வுப் பணிகளுக்கு ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழர்களின் வரலாற்றை அதிமுகவும் பாஜகவும் இணைந்து மறைக்கின்றன. கீழடி விவகாரத்தில் அதிமுக உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புகிறது. 2,440 பானைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இரும்பை உருக்கினர். பழங்காலத்தை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். கீழடியில் காணப்படும் அனைத்து பொருட்களும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முறையாக ஆய்வு செய்யப்பட்டன. கீழடி ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடியின் தொன்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதைத் தடுப்பது எது? ஆய்வில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், மத்திய அரசு மற்றொரு ஆய்வை நடத்தலாம் என்று அவர் கூறினார்.