சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், பாஜகவுடன் அதிமுக நெருக்கம் காட்டி வருகிறது. பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலான பதில் அளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியா என்று 6 மாதம் கழித்து கேளுங்கள் என்று எடப்பாடி பதிலளித்தார். பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு ஈபிஎஸ் நேரடியாக பதிலளிக்கவில்லை.
கூட்டணி குறித்து இப்போது அவசரப்பட்டு எதுவும் கூற முடியாது என்று கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2 நாட்களில் அமித்ஷா தமிழகம் வருவார். தமிழகத்திற்கு வரும்போது மேலும் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் அமித்ஷா கூறினார். இதனிடையே அதிமுக எஸ்.பி.வேலுமணி கோவை வந்த அமித்ஷாவை தனியாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஷாவுக்கு வந்த அமித்ஷாவை எஸ்.பி.வேலுமணி சந்தித்து அரசியல் பேசியதாக கூறப்படுகிறது. அமித் ஷா- எஸ்.பி., வேலுமணியுடன் சுமார் 8 நிமிடம் சந்திப்பு நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, வேலுமணி மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அண்ணாமலையிடம் அதிமுகவினர் எஸ்.பி., நெருக்கம் காட்டினர். அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.