புதுடில்லி: தேசிய நலன்களை புரிந்து கொள்ளும் காலகட்டம்… இந்தியப் பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பு நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நமது தேசிய நலன்களை புரிந்துக் கொள்வதற்கான காலகட்டம் இது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு விடுத்துள்ள சவாலை சந்திக்க வேண்டியது அவசியம் என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பு காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்களின் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜவுளி, ஆபரணம், தோல் , காலணிகள், ரசாயனப் பொருட்கள், மின் சாதனங்கள் மற்றும் தொழில் கருவிகள் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.