சென்னை: சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பது குறித்து சட்டப்பேரவையில் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சாத்தனூர் அணை திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என எம்எல்ஏ தங்கமணி கூறியதற்கு பதிலளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தெரிவிக்காமல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு 240-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
யாருக்கும் தெரிவிக்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை அரசு திறந்ததாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மனித தவறுதான் காரணம் என அறிக்கை கூறுகிறது. அனுமதி கிடைக்காததால் திறந்தனர். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை விட தற்போது குறைந்துள்ளது.
“சாத்தனூர் அணையை பொறுத்தவரை, 5 முறை எச்சரித்தும் படிப்படியாக திறக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியை போல் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்படவில்லை. சாத்தனூர் அணையை உரிய எச்சரிக்கையுடன் திறந்து விட்டதால் தான், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது” என்றார்.