புதுக்கோட்டை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை புதுக்கோட்டையில் இன்று அளித்த பேட்டி:-
தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதால் காமராஜர் ஆட்சி என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடப்பது நல்லாட்சி என்பதில் சந்தேகமில்லை. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அங்கெல்லாம் காமராஜர் ஆட்சி என்று பெயர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் அனைத்து விஷயங்களும் பிரச்சனைக்கு பொருத்தமானவை.
விஜய்யின் கட்சி பெயரை பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் நின்று ஓட்டு சதவீதத்தை காட்டினால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.
கைது செய்யவில்லை என்றால், ஏன் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேட்கும். எந்த மதத்தின் பள்ளிகளிலும் மூடநம்பிக்கைகள் கற்பிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.