புதுடில்லி: புதிய முதல்வரை ஆதரிப்போம் என்று ஆம்ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தாவுக்கு கெஜ்ரிவால், அதிஷி வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளால் இந்த அதிகாரம் கிடைத்ததாகவும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
டெல்லியின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்கான ஒவ்வொரு பணியிலும் புதிய முதல்வருக்கு தேவையான ஆதரவை வழங்க ஆம் ஆத்மி தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.