சென்னை : பிரதமரின் தமிழ் அக்கறையால் என்ன பலன் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தேசிய கல்விக் கொள்கை பெரும் அரசியல் கட்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்வர் இந்த கேள்வியை எழுப்பி உள்ளார்.
பிரதமரின் தமிழ் அக்கறை தமிழுக்கு என்ன செய்தது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு ரூ.1,488 கோடி நிதி ஒதுக்கும் மத்திய அரசு, 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் ரூ. 74 கோடிதான் ஒதுக்கியதாக விமர்சித்துள்ளார்.
இந்திக்கு எதிரி அல்ல; ஆனால், இந்தியை திணித்தால் தனி குணத்தை தமிழகம் காண்பித்துவிடும் என்றார்.