சென்னை : நடிகர் விஜய் தான் நடிக்கும் கடைசி படம் குறித்து அறிவித்துவிட்டு அரசியல் பணியில் ஈடுபடுகிறேன் என தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடக்கிறது.
நடிகர் விஜய் கடந்த (2024) ஆண்டு பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.2) நடக்க உள்ளது.
இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளையும் திறந்து வைக்கிறார்.