புதுடில்லி: சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை என்று காங்கிரஸ் எம்.பி.. ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் தன்னை சபாநாயகர் பேசவே அனுமதிப்பதில்லை என ராகுல் காந்தி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். தான் பேச நினைக்கும் போதெல்லாம், சபாநாயகர் தடுத்து நிறுத்துகிறார்.
நான் அவையில் அமைதியாக உட்கார வேண்டிய நிலை மட்டுமே உள்ளது. ஜனநாயகம் என்பதே மக்களவையில் இல்லை எனவும் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
கும்பமேளா, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து பேச விடவில்லை என்றும் ராகுல் கூறியுள்ளார்.