சென்னை : கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை பூஜ்யமாக உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
ஆனால், ஹிந்திக்கு 86, சமஸ்கிருதத்துக்கு 65 ஆசிரியர்கள் உள்ளதாக கூறியுள்ள அவர், மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தியையும், சமஸ்கிருத்தையும் திணிப்பதைதான் காலம் காலமாக திமுக எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காவிடில் கல்வி நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழாசிரியர்கள் யாருமே இல்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.