திருச்சி: திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிமனையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செல்வபெருந்தகை அளித்த பேட்டி:-
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வலுவாகவும் உறுதியாகவும் உள்ளது. எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்தியா கூட்டணி பற்றி பேச ஹெச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது.
திராவிடம் என்ற சொல்லை விட்டவர்களை சீமான் விமர்சிக்க வேண்டும். அவர்களை விட்டுவிட்டு தமிழ் தாய் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல. அவருடைய போக்கு அப்படி. அப்படித்தான் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.