ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கும் டாக்டர் செல்வ குமாரசாமி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டாக்டர் செல்லகுமாரசாமி களம் இறங்குகிறார்.
இவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு 82 தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளார். 100 சதவீதம் லஞ்சம் இல்லாத துரித மக்கள் சேவை கிழக்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பெற ஆவண செய்யப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.