மதுரை : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என கோர்ட் உத்தரவிட்டது. இன்நிலையில் தர்காவை இடம் மாற்ற வேண்டும்: எச். ராஜா ஆர்ப்பாட்டத்தின் போது பேசினார்.
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எச். ராஜா, “அரசியல் சட்டத்திற்கு எதிராக காவல்துறை செயல்படுகிறது. திருப்பரங்குன்றத்தை கூறுபோட நினைக்கும் இந்து விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
ராமஜென்ம பூமி போலவே திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” எனப் பேசினார்.