சென்னை: 45 கட்சிகளுக்கு அழைப்பு… தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு தேர்தலில் போட்டியிடாத நிலையிலும் கூட அக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்கும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தனர். ஆனந்த் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் தவெக தலைவர் விஜய், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விரிவாக அறிக்கை ஒன்றையும் வெளியிடுவார் என்றும் தெரிவித்தனர்.
தலைவர் விஜய் முன்வைக்கும் கருத்துகளை நாளை பொதுச்செயலாளர் ஆனந்த் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுவார் என்றும் தெரிவிக்கின்றனர்.