கொல்கத்தா : பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை என தெரிவித்து பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
மேற்கு வங்கத்திலுள்ள ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்திருந்த தாபசி மண்டல், இன்று(மார்ச் 10) அம்மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பாஜக பிரித்தாளும் அரசையலை மையப்படுத்தி நடைபோடுகிறது என்பதை சுட்டிக்கட்டியுள்ள அவர், இதனை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.