சென்னை : சமூக வலைதளங்களை மிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று பெண்களுக்கு சௌமியா அன்புமணி அட்வைஸ் செய்துள்ளார்.
பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என சௌமியா அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.
முன்பின் தெரியாத, பழக்கம் இல்லாத நபர்களை சமூக வலைதளங்களில் நண்பர்களாக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
நமக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த பெற்றோர்களை மதித்து பழக வேண்டும்.
முன்னேறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் சிறந்து உயர வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக இணையதளங்களில் நண்பர்களாக பேசி பழகி பின்னர் பெண்கள் மோசடி செய்யப்படுவதும், சிக்கல்களில் மாட்டிக் கொள்வதும் தொடர் கதையாகி வரும் நிலையில் சௌமியா அன்புமணி பெண்களுக்கு இவ்வாறு அட்வைஸ் செய்துள்ளார்.