சென்னை: தவெக தலைமையக செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததில் நாங்கள் வேதனையிலும் துக்கத்திலும் இருக்கும் இந்த சூழ்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு எங்கள் கட்சித் தலைவரின் பொதுக் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன.
இந்தப் பொதுக் கூட்டம் தொடர்பான புதிய விவரங்கள் எங்கள் கட்சித் தலைவரின் ஒப்புதலுடன் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.’ தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரச்சாரம் செய்வார் என்று கட்சி அறிவித்தது.

அதன்படி, சுற்றுப்பயண விவரங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் 2 வாரங்களுக்கு அவர் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில்தான், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய்யின் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக அறிவித்துள்ளது.