சென்னை: சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்குள் காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க தனது வீட்டில் இருந்து விஜய் புறப்படவிருந்தார்.
அப்போது வெளியே நின்றிருந்த நபர் ஒருவர் திடீரென காலணியை எடுத்து விஜயின் வீட்டிற்குள் வீசினார். பதறிப் போன காவலாளிகள் உடனடியாக அவரை அப்புறப்படுத்தினர். காலணி வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.