சென்னை: 2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தொழிலாளர்களை ஊக்கப்படுத்த அடுத்த அரசு நமதே என்று சொல்வது வழக்கம்; மாபெரும் தலைவர் எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. விஜய்-எம்.ஜி.ஆர். இருக்க முடியாது; யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்.
விஜய் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். விஜய்யைப் போலவே அமித்ஷாவுக்கும் கனவு உண்டு; பாஜகவின் பகல் கனவு பலிக்காது. மும்மொழிக் கொள்கையை திணிப்பதை அதிமுக ஏற்கவில்லை; மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்றார்.