தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சு குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சி., “விஜய் மாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி பேசுவார் என்று நான் நினைக்கவே இல்லை. நான் திகைத்துவிட்டேன். என் மகனின் வேகத்தை அன்று பார்த்தேன். அவர் படங்களில் நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் மேடையில் அவர் அப்படி பேசியது எனக்கு வியப்பாக இருந்தது. முதலில் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு என்னையறியாமல் கைதட்ட ஆரம்பித்தேன். உள்ளத்தில் இருந்த வேகம், சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் எல்லாம் சேர்ந்து விஜய்யை அப்படிப் பேச வைத்தது’’ என்றார் எஸ்.ஏ.சி.
விஜய்யின் பேச்சின் பின்னணி குறித்து தற்போது வரை பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய்யின் மாநாட்டுக்கு இவ்வளவு கூட்டம் எப்படி திரண்டது, எப்படி திரண்டது என்பது குறித்தும் உளவுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.