சென்னை: தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு சீமான் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தவெகவுடன் நாதக கூட்டணி வைக்காது என்று சீமான் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நாதக தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அவர், முந்தைய தேர்தல்களில் பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நாதக கூட்டணிக்கு செல்லவில்லை என்று கூறினார்.
திராவிடம் பேசாமலும், பெரியார் புகழ்பாடாமலும் நாதக பெரிய கட்சியாக வளர்ந்துள்ளதாகவும் சீமான் தெரிவித்தார்.