திருச்சி: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். எடப்பாடி பழனிசாமி மக்களை வேறு பாதையில் சந்திக்கிறார். எங்கள் கட்சியின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பயணிக்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரது பயணம் வேறு. ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அறிவிப்போம்.
அதுவரை, எங்கள் கட்சியின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவோம். ஜனவரி 9 வரை காத்திருங்கள். தேமுதிக ஒரு பகுதியாக இருக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். கூட்டணி அரசாங்கத்தை தேமுதிக வரவேற்கிறது.

அதிகாரம் பகிரப்படும்போது இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அரசு இருந்ததில்லை. அது செயல்படுத்தப்படும்போதுதான் அதன் நன்மை தீமைகள் தெரியும். அனைத்துக் க வுடன் நட்புறவுடன் பழகி வருகின்றன.
ஆனால் கூட்டணி என்ற வார்த்தைக்குள் நாங்கள் செல்லவில்லை. அதற்கான பதில் ஜனவரி 9-ம் தேதி தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.