டெல்லி: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு… தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று பட்ஜெட்டை தயாரித்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; மோடி அரசின் “காப்பிகேட் பட்ஜெட்” காங்கிரஸின் நீதி அஜெண்டாவைக்கூட சரியாக காப்பி செய்ய முடியவில்லை. மோடி அரசாங்கத்தின் பட்ஜெட், அதன் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்ற அரைவேக்காடு “மந்தைகள்” விநியோகம் செய்கிறது, இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி பிழைத்து வருகிறது.
இது “நாட்டின் முன்னேற்றத்திற்கான” பட்ஜெட் அல்ல, “மோடி அரசைக் காப்பாற்ற” பட்ஜெட். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.