சென்னை : பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. என் பின்னணி தான் என்ன என்று அரசியல் அரங்கில் கேள்வி எழுந்துள்ளது.
பாஜக புதிய மாநிலத் தலைவர் யார் என மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்படலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறியே இதுவரை இல்லை.
தமிழக பாஜக தலைவர்களும் அதுகுறித்து வாய் திறந்து பேசவேயில்லை. அண்ணாமலை வழக்கம் போல தனது தலைவர் பதவிக்குரிய வேலையை செய்து வருகிறார்.
இதை சுட்டிக்காட்டும் அரசியல் ஆர்வலர்கள், மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிக்கவே வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். தமிழகத்திற்கு அண்ணாமலை போன்ற அதிரடி தலைவர் தான் தேவை என பாஜக தலைமை நினைக்கிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் தான் தமிழக பாஜக தலைவர் யார் என்று அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதுதான் பின்னணி எனவும் தெரிவிக்கின்றனர்.