விக்கிரவாண்டி: நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போதுதான் புரியும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பதில்லை என்றுவேதனையுடன் தெரிவித்துள்ளார். நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள்.
மேலும், 60 ஆண்டுகால குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம் என திராவிட கட்சிகளை சீண்டிய அவர், திமுகவை அகற்றாமல் இந்தி மண்ணில் நல்ல அரசியல் இருக்காது. நான் தமிழன் என்பது தான் என்னுடைய அடையாளம்.
பலர் சாதியை இனம் என்று பேசி வருகிறார்கள். அது தவறு. ஒரு மொழியை பேசும் குழுக்கள் தான் இனம். தமிழன் என்பது தான் எனது அடையாளம். நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போது உங்களுக்கு புரியும் எனக் கூறியுள்ளார்.