தென்காசி: “தமிழ், தமிழர் என தம்பட்டமடிக்கும் திமுக சி.பி.ஆரை எதிர்ப்பது ஏன்?” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தென்காசி மாவட்டம் காசிதர்மம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ், தமிழர் என தம்பட்டமடித்து ஆட்சிக்கு வந்த திமுகவினர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஒரு தமிழருக்கு எதிராக செயல்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற வரலாற்றுப் பிழையை செய்யும் திமுகவினரை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.