சென்னை : அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு அளிக்கப்படும் என்று உறுதி தரவில்லை என அதிமுக தலைமை கூறியதற்கு பிரேமலதா எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மாநிலங்களவை MP சீட் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக முன்பு செய்தி வெளியானது.
ஆனால், எந்த வாக்குறுதியும் தரவில்லை என அதிமுக தலைமை தற்போது கூறிய நிலையில், அதற்கு தேமுதிகவினர் நேரடியாக எதிர்வினை ஆற்றவில்லை.
2026 தேர்தல் கணக்கா (அ) வேறு விஷயத்தால் பிரேமலதா பேசத் தயங்குகிறாரா என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். சிறிய விஷயம் ஆக இருந்தாலும் உடனடியாக பதிலளிக்கும் அல்லது விளக்கம் அளிக்கும் பிரேமலதா இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன் என்று தெரியாத நிலை கட்சியினர் மத்தியில் உள்ளது.
அதிமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் பிரேமலதா மௌனம் காத்து வருகிறார். இது எதற்காக என்பதுதான் தற்போது அரசியல் அரங்கில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.