தஞ்சாவூர்: தீபாவளியை ஒட்டி பட்டாசு கடை வியாபாரிகள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து தஞ்சாவூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் விழிப்புடன் கொண்டாடுவோம் விபத்தில்லா தீபாவளியை தலைப்பில் பட்டாசு வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை வகித்து பேசியதாவது:
பட்டாசு கடை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பட்டாசு விற்பனை செய்யவேண்டும். விற்பணை செய்யும் கடையின் அளவு வெடிபொருள் ஆகியவை விதிமுறைகளின்படி 296 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த அளவிற்கு மேல் அதிகளவு பட்டாக விற்பனை செய்ய கூடாது. பட்டாக விற்பனை செய்யும் கடையில் அதிக ஒளி தரும் விளக்குகளை பயன்படுத்தகூடாது. மாறாக LED விளக்குகளை பயன்படுத்த வேண்டும். பட்டாசு கடையின் உள்ளே மின்சார வயர்கள் பிவிசி பைப்பினுள் செல்லுமாறு இருக்கவேண்டும். சீரியல் பல்புகளை பயன்படுத்தக்கூடாது.
கடையை மூடும் போது மின்விசை பலகையை அணைத்து விட்டு செல்ல வேண்டும். அதிக ஒலிதரும் (120 டெசிபல் மேல்) பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம் இரண்டு வைக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகள் வைத்திருக்க வைக்க வேண்டும்.பட்டாசு கடையில் முதல் உதவி பெட்டி அவசியம் இருக்க வேண்டும்.
பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவசியம் தீயணைப்பான் கருவிகள் இயக்க தெரிந்திருக்க வேண்டும். பட்டாசு கடையில் சிறுவர்களை பணியில் அமர்த்த கூடாது. விதிமுறைகளின் படி பட்டாசு விற்பனை செய்து விபத்திலாத தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். இவர் அவர் பேசினார். இதில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.