தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மின்துறை பற்றிய புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் நாளை 5ம் தேதி சிறப்பு முகாம் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுகோட்டை, ஒரத்தநாடு, அனைத்து கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மின் நுகர்வோர்கள் மின் கணக்கீடு சம்மந்தமாகவும், மீட்டர் பழுது சம்மந்தமாகவும், மின் கம்பங்கள் சேதம் அடைந்தது பற்றியும் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.
இந்த புகார்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயனடைய பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.