தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இன்று மின்நுகர்வோர் கூட்டம் நடக்கிறது.
கும்பகோணம் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட செயற் பொறியாளர் ஜெ. திருவேங்கடம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
“மேற்பார்வைப் பொறியாளர் பி. விமலா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் நுகர்வோர் பங்கேற்று, குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இன்று, கும்பகோணம், மின் நுகர்வோர், குறைகள், அறிவிப்பு, பங்கேற்கலாம்,