புதுடெல்லி: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எப்படி தெரியுமா?
ரயில்வேக்கு கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.8,913 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ஆர்டிஐ மூலம் ரயில்வேயிடம் இருந்து பெறப்பட்ட பதிலில், 2020-2025 வரை 31.35 கோடி மூத்த குடிமக்கள் ரூ.8,913 கோடி கட்டணம் செலுத்தி பயணித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2020 மார்ச் வரை மூத்த குடிமக்கள் அளிக்கப்பட்ட சலுகையை கொரோனா காலத்தில் ரயில்வே ரத்து செய்தது.
இதையடுத்து ரயில்வேக்கு கூடுதல் லாபம் கிடைத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.